
// அனைத்துக் கவிதைகளையும் படிக்க
விழிமொழி //
*
உன்னை என் கவிகள்
வெட்கப்படுத்தும் போதெல்லாம்
நான் நீயாகிவிடக்கூடாதா
என்றெண்ணி நானும்வெட்கமடைகின்றேன்
*
நீ கவிதைகள் எழுதவேண்டும்
நீயாக இருந்து
நான் வாசிக்கவேண்டும்
என் கவிகளை
நீ படித்துணர்ந்ததைபோல…
*
உன்னைக் கண்டமுதலே
வானமும் அதன் நீலமும்
தனித்தனியே
உணர்ந்து கொண்டேன்
*
உன்னை கண்டமுதல்
இதுநாள் வரை
நீ எங்கு,எப்படி இருந்தாய்
என்பதிலேயே
தாகம் கொண்டது மனசு
*
என் கால்களிடம்
கேட்டுப்பார்
உனக்காக காத்திருந்த
தருணங்களில்
என் கால்களின்
வலியை எப்படிகரைத்தேன்என்று
அழகிய கவியாகசொல்லும்..
உன்னை காதலிக்க ஆரம்பித்தபிறகு
அவைகளும் கவி எழுதுகின்றன
*
என் ஆனேக கிறுக்கல்களை
நீ படித்ததாலேயே அவைகள்
இன்று கவிதைகளாகிவிட்டன
*
நான் மொழிப்பெயர்க்க
ஆசைப்படும் அனைத்து
தருணங்களும்
உன் தனிமையே..
*
விடிந்த பின்னும்
தொடரும், நாம்
தொடங்கிய நேற்றைய பேச்சு
தொலைபேசி இன்னும்
செவியோரம் சினுங்கிக்கொண்டிருக்கின்றது
அனைக்க மனமில்லாமல்
*
Labels: காதல்