VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Tuesday, January 22, 2008

காதலிகள்.com(4)

// அனைத்துக் கவிதைகளையும் படிக்க விழிமொழி //
*உன் பிரிவினில்

கண்களில்
கரையும் உப்புக்கரைசலை
உள்வாங்கிக்கொண்டு

பிரிதலில் உனக்கொன்றும்
சலனமில்லை
என்பதுபோல் பிரிந்துவிடுவாய்

இருந்தும் ஏன்?
விழிகொண்டு
பேசமறுக்கின்றாய்
நம் சந்திப்புகளில்

*நீ
என் மனப்பூ
சேமித்த உணர்வுத்துளியடி..

பொறுத்திருந்துபார்
காதல் முத்தொன்றை
பரிசளிப்பேன்
பூவின் இதழ்களைவிரித்து…

* நம் நடைப்பயணஙகளில்
நமக்கு துணையாக
பூமரங்கள் சிந்திடுமே
அந்த சிவப்பு பூக்களை

நினைவிருக்கின்றதா?

அவைகளே உனக்கான
சந்தங்களை எனக்கு
தந்து, கவிஞனக்கின
என்னை இன்று!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home