காதலிகள்.com

//அனைத்துக் கவிதைகளையும் படிக்க விழிமொழி //
*நான் படித்ததில்
மிகவும் பிடித்தது
உன் இதழ்களின்வரிகளே!
சில்மிஷியே
அருகினில் வா!
*உன்வீட்டு வாசலில்
அறிவிக்க செய்
"தேவதை ஜாக்கிரதை"
*
நீ நிலவொளியினில்தான்
நடந்து வருகின்றாய்
பதறுகின்றது
பதறுகின்றது
என் மனசு
ஓளியின் வீச்சில்
ஓளியின் வீச்சில்
காயம்பட்டுவிடக்கூடாதே
உன் மேனி என்று..
*
நீ ‘ம்’ கூட சொல்லவேண்டாம்
கடைக்கண்ணால்
கடைக்கண்ணால்
மட்டும் பார்
உனக்கும் சேர்ந்து
நானே காதலிக்கிறேன்!
*
என்னை முதன்
முதலாக பார்த்தபோது
என் தாய் வடித்த
ஆனந்தக் கண்ணீரே
எனக்கும் வழிந்தது
உனை முதன்முதலாக
பார்த்தபோது…
*
"க்ஞங்ங்ங் ந்ணஜ
ஒப்ப்ம்ட்ம்ம்ம் ந்ன்ன்ன்"
புரிகின்றதா?
இப்படித்தான்
இப்படித்தான்
நீயில்லாத நேரங்களில்
நான்
*
உனை அழகி என்று மட்டும்
வர்ணிக்கும் தோழி மீது
கோபமாய் வருகின்றது
தேவதையே..
கோபமாய் வருகின்றது
தேவதையே..
*
நீதாமதமாகவே
வருவாய் என்றாலும்
நீ வரும் வரை
வருவாய் என்றாலும்
நீ வரும் வரை
துணையாக இருந்த
உன் நினைவுகளை
களையும் போதுதான்
களையும் போதுதான்
கோபமே வருகின்றது
உன் மீது!
*
சமிபத்தில்
நீயும் நானும்
லாபமடைந்த விஷயம்
முத்தம்.
முத்தம்.
*
நீ என்னுடன்
சண்டையிடுவதே
முத்தம் கொடுக்கத்தான்
முத்தம் கொடுக்கத்தான்
என்று எனக்குதெரியும்
அது உனக்கும்தெரியும்
அது உனக்கும்தெரியும்
பின் எதுக்கு
சண்டை?
*
நீ
எங்காவது
எதையாவது
விட்டுவிட்டு போ
பத்திரப்படுத்தவேண்டும்
என்னுள் இருக்கும்
என்னுள் இருக்கும்
உன் நினைவுகளுக்காக..
*
நான் எழுதும்
கவிதைகள் யாவும்
உனக்காகத்தான் என்று
சொல்வது
பொய் என்றாலும்
உண்மையும் உண்டு.
*
*
எனக்கு தனிமை
மிகவும் பிடித்திருந்தது
அது உன்னுடன்
மட்டும் எனும்போது..
*
நான் எழுதி அனுபிய
கவிகள் யாவும் திருடப்பட்டவையே
உன்னிடமிருந்து
உன்னிடமிருந்து
மட்டும்
*
உன் கண்கள் என்ன
பன்பலைவரிசையா?
எப்போதும்
ஏதோ ஒன்றினை
என் மன வானொலி
இதயத்தில்
ஓயாமல் ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றது!
உன் நினைவுகளை!
*
நீ என்னோடு இல்லாத
நீ என்னோடு இல்லாத
ஒவ்வொரு மணித்துளியையும்
சேமித்து வைத்திருக்கின்றேன்
அந்த நிமிடங்கள்
யுகங்களானாலும்
காத்திருப்பேன்நான்
நீ அனுப்புவதாக
சொல்லிச்சென்ற
ஈரமுத்தம் பதித்த
கடிதத்திற்காக…
*
புள்ளிகளை
புள்ளிகளை
நிலத்திலிட்டு
கோலத்தை
என் மனதினில்
வரைகின்றாய்
தினமும்
உன் வீட்டுவாசலில்
நீர் தெளித்து
*
ஆற்றுப்படுக்கையில்
என் தனிமையை,
நம் சந்திப்புகளின்
சாட்சியங்களோடு
சமாதானத்தில்
ஈடுபடும்போதெல்லாம்
என் அழுகையை
அதிகப்படுத்திவிடுகின்றது
நம்மை தினம் காண வரும்
தூரத்து நிலா!
*
என் வசந்தகாலத்தின்
*
என் வசந்தகாலத்தின்
கடைசி,காதல் சின்னமான
அந்த பூத்துக்குலுங்கிய
பூமரத்தின்
அடியிலிருந்துதான்
எழுதுகின்றேன் இதை
நம் பிரிதலில்
தன்னை பிளந்து
கிளைகளை ஒடிந்துக்கொண்டது
மரம்
உன்னை போலவே
இரக்கமற்றவளே..
Labels: காதல்
1 Comments:
At January 10, 2008 at 8:00 AM ,
சந்திரமுகன் said...
அருமை!!மிகவும் அருமை.அனுபவித்து எழுதிய கவிதை.எப்படி உங்களால் முடிகிறது இதை போல் படைப்பதற்க்கு. தொடரட்டும் உங்கள் பணி.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home