காதலிகள்.com (7)

//அனைத்துக் கவிதைகளையும் படிக்க விழிமொழி //
----------------------------------------------
என் எட்டு திசைகளிலும்
நீயே நிரம்பிக்கிடக்கின்றாய்
என அறிந்து
நான் பாதசாரியாக
பயணித்த
என் தேடலில்
நீ எந்த திசையில்
உயிர்வாழ்கின்றாய்
என அறியாது
திசையினையே
நீயெனக் கொண்டு
சூவாசிக்கின்றது
என் நுறையீரல்
*சொல்வதை கேளாமல்
சட்டென
சிரித்துவிடுகின்றாய்
நீ
அப்பொழுதெல்லாம்
ஆசையில் வீழ்கின்றது
கன்னக்குழியுள்
என் மனசு.
*என் செய்வது
நீ அன்னிச்சையாக
சுவாசித்து விடுகின்றாய்
காற்றை
பெயர்பெற்றது
தென்றலென்று.
*
*
Labels: காதல்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home