VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Wednesday, January 23, 2008

காதலிகள்.com(5)



// அனைத்துக் கவிதைகளையும் படிக்க விழிமொழி //

ஆசை மிகுதியில்
உன் கனனம் தொடும்
மழைத்துளியை
அவசரப்பட்டு
உதறிவிடாதே

என் கவிதை
கருவறையில்
அவைகள் தான்
உன் சாயல்
குழந்தைகள்...

*உன்னால் காயம்பட்டு
உடைந்துபோனது
என் இதயம் - பின்

சிதரிய எண்ணிக்கையில்லா
அவைகள், மீண்டும்
முந்தைய அளவைவிட
உன்னை விரும்பச் செய்து

வலியினிலும் இன்பமடைந்து
உடைதலுக்கு தயாராகின்றன
மீண்டும்.

*என் ஒவ்வொரு
அனுவினிலும் நீ

உடைக்க நினைக்காதே

அவை இரண்டெனப்பிளந்துதரும்
காதல் வெப்பத்தை
தாங்கமாட்டாய்

மெல்லியவளே!
*

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home