VIZI MOZI

உன் விழியெல்லாம் நவரசம் || கவிதைகள் || தொட்டராயசுவாமி.அ

Monday, December 10, 2007

21. இவைகளுக்காக

நம்முள்
தொலைந்துபோன
உணர்வுகளை
திரைசீலையிட்டு
உன்னுள்தேடுகிறாய்..

ஒற்றை தடத்தில்
ஓடிஒளிந்த
உணர்வோடையை
என்னுள்தேடுகிறேன்..

முதலில் யாருக்கு
கிடைத்தாலும்
அவர்களின் உதடு

கண்களின்
உப்புகரைசலை
சுவைத்துவிடும்...

இருந்தும்..

உனக்குள் காதலனும்
எனக்குள் காதலியும்
இவைகளுக்காய்
வாழ்ந்துகொண்டுதான்
சாகிறார்கள்..

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home